நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கடந்த மாதம் உதயமானது கோத்தகிரி சிட்டிசன் நல சங்கம் பல அனுபவம் வாய்ந்தவர்கள் ஒன்று கூடி இந்த சங்கம் உதயமானது.
நீலகிரி மாவட்டத்திற்க்கு புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்ட திருமதி. லஷ்மி பவ்யா தண்ணீரு. இ.ஆ.ப., அவர்களை நேரில் சந்தித்த கோத்தகிரி சிட்டிசன் நல சங்கத்தின் தலைவர் ஆசிரியர் கல்லாடா திரு.K.L. ராஜ்குமார் அவர்கள் , பொதுச்செயலாளர் வக்கீல் திரு. B.J. முருகன் அவர்கள் , உறுப்பினர்கள் ஜான் சன் காம்ப்ளக்ஸ் உரிமையாளர் மற்றும் சமூக ஆர்வலர் திரு. ரிக்கிராஜ் அவர்கள், கோத்தகிரி சிட்டி குரூப் பங்குதாரர் திரு. தாஜுதீன் அவர்கள் சால்வை அணிவித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஆக பொருப்பேற்றதற்க்கு வரவேற்பு அளித்தனர். மேலும் கோத்தகிரி சிட்டிசன் நல சங்கம் நீலகிரி மாவட்ட நிர்வாகத்திற்க்கு அனைத்து வகையிலும் உறுதுணையாக இருப்போம் என்று கூறினார்கள்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment