வனவிலங்கு பட்டியலில் இருந்து காட்டுப்பன்றி நீக்கம். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 24 July 2024

வனவிலங்கு பட்டியலில் இருந்து காட்டுப்பன்றி நீக்கம்.



நீலகிரி மாவட்டத்தில் விவசாயிகள் தேயிலைக்கு  அடுத்த படியாக மலைக்காய்கறிகளை அதிக அளவில் பயரிட்டு வரும் நிலையில்  காட்டுப்பன்றிகளால் லட்சக்கணக்கில் நஷ்டம் அடைந்து வருகின்றனர். கேரளாவை போல் காட்டுப்பன்றிகளை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்கவேண்டும் என விவசாயிகள் தமிழக அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்திருந்தனர். 


இந்த நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தமிழக வனத்துறை அமைச்சர் திரு. மதிவேந்தன் அவர்கள் மிக விரைவில் காட்டுப்பன்றிகளை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்கிய அரசாணை வெளியிடப்படும் என தெரிவித்தார். இது நீலகிரி மாவட்ட விவசாயிகளை ஓரளவு மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இருப்பினும் மற்ற வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்கு வராமல் கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad