நீலகிரி மாவட்டத்தில் முதல்முறையாக உடல் உறுப்புகள் தானம் செய்த திருமதி எமிலி என்பவரின் உடலுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி மு அருணா, இ அ ப, அவர்கள் தமிழ்நாடு அரசின் சார்பில் மலர்வலையம் வைத்து அஞ்சலி செலுத்தினர் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 13 July 2024

நீலகிரி மாவட்டத்தில் முதல்முறையாக உடல் உறுப்புகள் தானம் செய்த திருமதி எமிலி என்பவரின் உடலுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி மு அருணா, இ அ ப, அவர்கள் தமிழ்நாடு அரசின் சார்பில் மலர்வலையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்





   நீலகிரி மாவட்டத்தில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகள் தானம் செய்த திருமதி எமிலி என்பவரின் உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு மு அருணா இ. ஆ.ப அவர்கள் நேற்று (12/07/2024 ) உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.     


 நீலகிரி மாவட்டம் உதகை  மேரிஸ்ஹில் பகுதியைச் சேர்ந்த 63 வயதான திருமதி. எமிலி  என்பவர் மூளை சாவு அடைந்ததை தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளான கல்லீரல் கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கும் சிறுநீரகங்கள் கே எம் சி எச் மருத்துவமனைக்கும் கண்கள் சங்கரா கண் மருத்துவமனைக்கும் தானமாக பெறப்பட்டு கொண்டு செல்லப்பட்டது.  இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது  நீலகிரி மாவட்டம் உதகை மேரிஸ்ஹில் பகுதியை சேர்ந்த திருமதி எமிலி என்பவர் மூளைச்சாவடைந்தார் இந்த துயர சம்பவத்திலும் அவரது குடும்பத்தினர் திருமதி எமிலி அவர்களது கண்கள் சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் ஆகியவற்றை தானம் செய்ய முன்வந்துள்ளனர்.  



.இது மிகவும் பாராட்டக்கூடிய விஷயமாகும் இதன் மூலம் கிட்டத்தட்ட ஆறு நபர்கள் பயனடைவார்கள் மேலும் இது உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மூலம் செய்யப்படும் முதல் உறுப்பு தானமாகும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இறக்கும் முன் உடல் உறுப்பு தானம் வழங்குவோரின்  இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர். திருமதி எமிலி அவர்களது உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது  மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்வின் போது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி இருப்பிட மருத்துவ அலுவலர்  ரவிசங்கர் உதவி இருப்பிட மருத்துவ அலுவலர்கள் வினோத்குமார் மணிகண்டன் மயக்கவியல் மருத்துவர் கார்த்திக் உதகை வட்டாட்சியர் சரவணகுமார் மருத்துவர்கள் செவிலியர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்

.தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad