நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் இயங்கி வரும் பாரதியின் தலைமுறைகள் அமைப்பின் சார்பில் ரத்ததானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று காலை கூடலூர் கொளப்பள்ளியில் இருந்து மோட்டார் இரு சக்கர வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு பயணத்தை தொடங்கிய திரு மணிகண்டன் அவர்களுக்கு உதகை மத்திய பேருந்து நிலையம் அருகில் நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர் கூட்டமைப்பின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லம் நிர்வாகி திரு தஸ்தகீர்,நீலகிரி எஜுகேஷனல் டிரஸ்ட் நிர்வாகிகள்,
கோஸ்டல் இளங்கோ கேட்டரிங் கல்லூரி நிர்வாகிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பணியை மேற்கொள்ளும் மணிகண்டன் அவர்களுக்கு வாழ்த்து கூறி வழி அனுப்பி வைத்தனர்
மணிகண்டனின் இந்த விழிப்புணர்வு பயணம் நாளை சேலத்தில் நிறைவடைகிறது..
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment