அம்மா பெயரில் மரக்கன்று நட்ட மாணவ மாணவிகள் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 26 July 2024

அம்மா பெயரில் மரக்கன்று நட்ட மாணவ மாணவிகள்




   மத்திய சுற்றுச்சூழல் துறை கால நிலை மாற்றம் மற்றும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பாகமாக கற்றல் மற்றும் செயல்பாடுகள் கருத்தில் கொண்டு பள்ளி மாணவர்களுக்கிடையே இயற்கையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று தொடங்கப்பட்டது. இதில் உலகம் சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு பாரதப் பிரதமர் அனைத்து மாணவர்கள் தங்களுடைய அம்மாவின் பெயரில் ஒரு மரக்கன்று நட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் அதன்படி நீலகிரி மாவட்ட தேசிய பசுமை படை சோலை மரக்கன்றுகள் பல மரக்கன்றுகள் நடுவதற்கான முக்கிய காரணங்களை விளக்கி பல்வேறு பள்ளிகளில் மரக்கன்றுகள் நடும் சூழல் பணிகளை தொடங்கினார்கள். இதில் உதகையில் புனித தெரசனை உயர்நிலைப்பள்ளி ஓம் பிரகாஷ் ஆரம்பப்பள்ளி சிஎஸ்ஐ ஹோபார்ட் நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் வளாகத்தில் மாணவ மாணவிகள் தங்களது அம்மாவின் பெயரில் மரக்கன்றுகளை நேற்று நடவு செய்தனர் தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் மற்றும் மாணாக்கர்கள் பங்கேற்றனர் நீலகிரி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் வே சிவதாஸ் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad