ஊட்டி டேவிஸ்டேல் ரேஸ்வியூ தெரு பகுதியில், மின் கம்பி மீது மரம் விழுந்ததால் ஆறு நாட்களாக மின்சாரம் இன்றி 30 குடும்பகள் தவித்து வருகின்றனர் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 26 July 2024

ஊட்டி டேவிஸ்டேல் ரேஸ்வியூ தெரு பகுதியில், மின் கம்பி மீது மரம் விழுந்ததால் ஆறு நாட்களாக மின்சாரம் இன்றி 30 குடும்பகள் தவித்து வருகின்றனர்


நீலகிரி மாவட்டத்தில் தற்போது கனமழை அதிகரித்து வருகிறது பல்வேறு இடங்களில், மரம் விழுந்ததில் கார்கள், மின் கம்பிகள் சேதம் அடைந்துள்ளன. இதனை மின்வாரிய ஊழியர்கள் இரவு, பகல் என்று பாராமல் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஊட்டி டேவிஸ்டேல் அருகே ரேஸ்வியூ பகுதியில் மின் கம்பி மீது மரம் விழுந்தது.  இதனால், 30 க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு  மின் இணைப்பு  துண்டிக்கப்பட்டுள்ளது.     கடந்த ஆறு நாட்களுக்கு மேலாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், 30 குடும்பத்தினர் அவதி அடைந்து வருகின்றனர்.   


மேலும், அறுந்து விழுந்த மின்கம்பி அருகே, தனியார் கல்லூரியை சேர்ந்தவர்கள்  கட்டட வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதுகுறித்து மின்வாரியத்தினருக்கு தகவல் தெரிவித்தும், புகாரினை பதிவு செய்தும்  இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அசம்பாவிதம் ஏற்படும் முன் மின்வாரியத்தினர் உடனடியாக இப்பகுதி ஆய்வு செய்து மின் இணைப்பு சரி செய்து கொடுக்க  வலியுறுத்தி உள்ளனர். நடவடிக்கை எடுப்பார்களா மின்துறையினர்? பொதுமக்கள் கடந்த ஆறு நாட்களாக இருளில் மூழ்கியுள்ளனர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக குரல் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது..


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad