நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அட்டவளை பகுதியில் பசுமாடு ஒன்று 50அடி பள்ளத்தில் மழையால் வழுக்கி விழுந்த தகவலை விஜிலென்ஸ் பத்திரிக்கை சிறப்பு ஆசிரியர் சிவகிருஷ்ணா அவர்களால் கோத்தகிரி தீயணைப்பு துறைக்கு தெரிவிக்கப்பட்டது.
தவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்க்கு வந்த கோத்தகிரி தீயணைப்பு துறையின் திரு.பிரேமானந்தன், திரு.மாதன் மற்றும் குழுவினர் காற்று மற்றும் மழையினிடையே சிறப்பாக பணிபுரிந்து பசுமாட்டை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தது. பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே மிகுந்த பாராட்டுக்களை பெற்றது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K .A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment