நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக இருப்பவர் திருமதி. ரூபி பரிமளா அவர்கள் அவரது கணவர் திரு. இம்மானுவேல் ஆண்டர்சன் அவர்கள் கோத்தகிரி யூனியன் சர்ச் பாதிரியராக இருந்து ஓய்வு பெற்றவர்.
கடந்த 1998 ஆம் ஆண்டு திருமதி..ரூபி பரிமளா அவர்களுக்கு பிரசவத்தின் போது அதிக உதிரப்போக்கு ஏற்பட்டு தாயும் சேயும் ஆபத்தான நிலையில் இருக்க மருத்துவர்கள் ஓ நெகடிக் ரத்தம் தேவை என்றபோது கோத்தகிரி ஜேசிஸ் உறுப்பினர் (2007 ல் தலைவர்) ஆக இருந்த திரு. ரவிக்குமார் நீப் காம்பிரின்ட்ஸ் அவர்களுக்கு தகவல் வந்ததில் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று ரத்ததானம் அளித்தார்.
அதனால் அவரது உடல்நிலை சீரடைந்து முதல் ஆண் குழந்தையும் இரண்டு ஆண்டுகள் கழித்து இரண்டாவது ஆண் குழந்தையும் பிறந்தது. தற்போது நலமாக இருக்கும் அவர் தனக்கு ரத்ததானம் அளித்தது திரு. ரவிக்குமார் அவர்கள் என்பதை 26 ஆண்டுகள் கழித்து தனது கணவர் மூலம் அறிந்து இன்று (ஜூலை 27) நேரடியாக வந்து சகோதரதுவத்தை உணர்வதாகவும் வாழ்நாளில் மறக்க முடியாது என்றும் இதயம்கனித்த சந்தோஷங்களை தெரிவித்ததுடன் நினைவு பரிசும் வழங்கினார்.
இந்த நிகழ்வை நேரடியாக கண்டபோது நான் கோத்தகிரி ஜேசிஐ யில் இருந்த போது இருவரும் ஆற்றிய பணிகள் நினைவுகள் சந்தோஷ அலைகளாக இருக்கிறது. கோத்தகிரி ஜேசீஸ் இயக்கத்திற்க்கு மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment