நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட மவுண்ட்ப்ளசென்ட், மோர்ஸ் கார்டன் சந்திரா காலனி ஆகிய பகுதிகளில் 600க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு பழுதடைந்த குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் அங்குள்ள பல்வேறு இடங்களில் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில்.
நகராட்சி பகுதிகளில் ஏற்கனவே 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கும் நிலையில் குடிநீர் குழாய் உடைப்பு காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இந்த நிலை மாற்றி அமைக்க குன்னூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூபாய் 33 லட்சம் செலவில் புதியதாக குடிநீர் குழாய்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது இதற்காக நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment