நீலகிரி மாவட்டம் கூடலூர் பந்தலூர் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது கட்டுப்படுத்த வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை
நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளுக்கு நாள் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வனப்பகுதியில் இருந்து வெளியேறி உணவு தேடி கிராமப் பகுதிகளின் அருகே உலாவரும் காட்டு யானைகள் குடியிருப்புகள் மற்றும் விளை நிலங்களை சேதப்படுத்துவதும் மனிதர்களை தாக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் பந்தலூர் அருகே நெல்லியாளம் பகுதியில் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஒற்றை ஆண் காட்டு யானை தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதியில் நுழைந்து வீட்டின் கதவை உடைத்து நுழைய முயன்றதால் வீட்டிற்குள் இருந்த குடியிருப்பு வாசிகள் மிகுந்த அச்சமடைந்தனர்.
அப்போது அருகில் இருந்த மற்ற குடியிருப்பு வாசிகள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும், காட்டு யானையை விரட்ட சத்தம் எழுப்பியதை அடுத்து காட்டு யானை அப்பகுதியில் இருந்து சென்றது.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையின் நடமாட்டத்தை கண்காணித்தும் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நள்ளிரவு குடியிருப்பு பகுதியில் நுழைந்து வீட்டின் கதவை உடைத்த காட்டு யானையால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் இரவு முழுவதும் தோட்டத் தொழிலாளர்கள் அச்சத்துடன் வீடுகளில் தங்கினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கூடலூர் தாலுகா நௌசாத் செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment