நீலகிரி கேரட்-பாதுகாக்க விவசாயிகள் நல சங்க தலைவர் அழைப்பு. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 14 July 2024

நீலகிரி கேரட்-பாதுகாக்க விவசாயிகள் நல சங்க தலைவர் அழைப்பு.


நீலகிரி கேரட்-பாதுகாக்க  விவசாயிகள் நல சங்க தலைவர் அழைப்பு.


நீலகிரி விவசாயிகளுக்கு  ஒரு தாழ்மையான வேண்டுக்கோளை நீலகிரி மாவட்ட விவசாயிகள் நல சங்க தலைவர் இளித்துரை திரு. N.விஸ்வநாதன் அவர்கள் விடுத்துள்ளார்.


டில்லி கேரட் மேட்டுப்பாளையம் மண்டிகளுக்கு வருகையால் ஊட்டி கேரட் விலை பாதிக்க கூடும் என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 


கடந்த வருடம் மேட்டுப்பாளையம் சில மண்டி வியாபாரிகள் டில்லியிலிருந்து கேரட்டை கொண்டு வந்து ஊட்டி கேரட் என்று சொல்லி விற்று வந்தார்கள் இதனால் ஊட்டி கேரட் விலை சரிந்தது இதனால் நீலகிரி விவசாய நல சங்கத்தினர்  மேட்டுப்பாளயம் மண்டி வியாபாரிகளிடம் நடத்திய பேச்சு வார்த்தையின்  பயனாக டெல்லி கேரட் வரத்து நிறுத்தப்பட்டது ஊட்டி கேரட்டிற்க்கு இந்த வருடம் ஓரளவுக்கு விலையும் கிடைத்தது.


சமீபத்தில் டில்லி கேரட் மதுரைக்கு வியாபாரிகள் கொண்டு வந்தனர் இதனால் கொடைக்கானல் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது  கொடைகானல் விவசாயிகள் ஒன்று திரண்டு டில்லி கேரட்டை மதுரைக்கு வராமல் தடுத்தனர்  இதனால் வியாபாரிகள் மேட்டுப்பாளயத்திற்கு டில்லி கேரட்டை கொண்டு வந்துள்ளனர்.


எனவே நீலகிரி விவசாயிகள் ஒன்று திரண்டு  மேட்டுப்பாளையம் சென்று மண்டி வியாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி டில்லி கேரட் வராமல் செய்ய வேண்டும் என   நீலகிரி விவசாயிகள் நல சங்க தலைவர் இளித்துரை திரு.N. விஸ்வநாதன் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். தொடர்புக்கு- 97874 00567 என்ற எண்ணில் விவசாயிகள் அழைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad