பந்தலூர் அருகே உப்பட்டி ஸ்ரேயாஸ் ஹாலில் உணவும் சுற்றுச்சூழலும் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 24 July 2024

பந்தலூர் அருகே உப்பட்டி ஸ்ரேயாஸ் ஹாலில் உணவும் சுற்றுச்சூழலும் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.


சிபிஆர் சுற்றுச்சூழல் கல்வி மையம், கருணா பவுண்டேஷன், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் ஆகியன சார்பில் நடைபெற்ற உணவும் சுற்றுச்சூழலும் விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். 


ஏகம் பவுண்டேஷன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன், நுகர்வோர் மைய நிர்வாகி பிரேம்குமார், தையல் பயிற்சி மைய ஆசிரியர் சுலோச்சனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


பாரத மாதா சர்ச் பங்குத்தந்தை ஜோர்ஜ் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசும்போது நீலகிரி மாவட்டம் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாக உள்ளதால் இயற்கையான, சுத்தமான காற்று, நீர் கிடைக்கிறது. அதுபோல உணவு முறைகளிலும் பழமை சார்ந்து உள்ளதால் நகர பகுதிகளில் உள்ள நோய்கள் குறைந்து உள்ளது. தற்போது புற்று நோய் உட்பட பல்வேறு நோய்கள் நமது உணவு முறைகளினால் ஏற்பட்டுள்ளது. தரமான உணவுகள் மட்டுமே உடலை வளர்க்கும். ஆரோக்கியமான வாழ்க்கை பெற இயற்கை சார்ந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும் என்றார்.



சிபிஆர் சுற்றுச்சூழல் கல்வி மையத்தின் கள அலுவலர் குமாரவேலு பேசும்போது உணவு முறைகளில் ஏற்படும் மாற்றம் மனித வாழ்வு நாட்களை குறைகிறது. உணவு உற்பத்தியில் பயன்படுத்தபடும் இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி மற்றும் அசைவ உணவுகள் விரைவான வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் ஹார்மோன் ஊசிகள் உள்ளிட்ட மருந்துகள் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியவனாக உள்ளன.  எனவே இயற்கை சார்ந்த விவசாயம் முறைகள் மேம்படுத்தி ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பதப்படுத்த உணவுகளில் சேர்மங்கள் உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்றார் 


கூடலூர் ரோட்டரி வேலி கிளப் தலைவர் ராபர்ட் பேசும்போது இயற்கை சூழ்நிலைக்கேற்ப ஒவ்வொரு வகையான மரங்கள் மற்றும் பழங்களை கீரைகளை உற்பத்தி செய்துள்ளது. இவை அந்தந்த காலங்களில் ஏற்படும் நோய்களுக்கு மருந்தாகும் பயன்பட்டு வருகிறது இயற்கை சார்ந்த உணவுகளை தவிர்த்து வருவதனால் நோய்களுக்கு ஆளாகின்றோம். ஆனால் விலங்குகள் இயற்கை தந்த உணவுகளை உட்கொண்டு நோய்கள் இன்றி வாழ்கின்றன. காய்கறிகள் பழங்கள் அனைத்தும் பல்வேறு நோய்களை உருவாக்கும் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியதாக உள்ளன இவற்றை முறையாகவும் சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ளுதல் அவசியம். சரியாக உணவு முறைகளை எடுத்து கொள்ளும்போது உடல் தேவையான ஊட்டச்சத்துக்கள் எடுத்துக் கொள்வதற்கும், உடல் வளர்ச்சிக்கு பயனுள்ளதாகவும் அமைகிறது என்றார்.நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளை சார்ந்த 70 க்கும் மேற்பட்ட மகளீர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக நந்தினி வரவேற்றார். முடிவில் ஜூபினா நன்றி கூறினார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad