குன்னூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவிகளின் பார்லிமென்ட் துவக்கப்பட்டு பலரும் பல்வேறு துறைகளின் அமைச்சர்களாக பங்கேற்றனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியான புனித மரிய அன்னை மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்தப் பள்ளியின் இந்த கல்வி ஆண்டிற்கான மாணவிகளின் தலைவி மற்றும் துணைத் தலைவி தேர்வு செய்யப்பட்டு பதவியேற்பு விழா நடைபெற்றது. இதே போல் பள்ளியின் மாணவிகளின் பார்லிமென்ட் தனியாக துவக்கப்பட்டு மாணவிகள் பலரும் பல்வேறு துறைகளில் அமைச்சர்களாக பதவியேற்றனர். குறிப்பாக உள்துறை அமைச்சர் கல்வித் துறை அமைச்சர் போக்குவரத்து துறை அமைச்சர் விளையாட்டு துறை அமைச்சர் என்று பல்வேறு துறை அமைச்சர்களாக மாணவர்கள் பதவி ஏற்று கொண்டனர். வெலிங்டன் எம் ஆர் சி ராணுவ மையத்தின் மேஜர் முத்துக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
தொடர்ந்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் விழாவில் அவர் உரையாற்றுகையில் இதுபோன்ற பதவிகள் வகித்த பள்ளிகளில் செயல்படுத்துவது ஒரு சிரமமான காரியம்தான் அதனை பள்ளி ஆசிரியர்களும் நிர்வாகத்தினரும் சிறப்பாக செய்வதாகவும் தெரிவித்தார். இதேபோன்று பள்ளி பார்லிமென்ட் துவங்குவது அந்த அந்த பகுதிகளில் நடக்கும் குறைகளை தீர்க்க ஏதுவாகமையும் வருங்காலத்தில் இதுபோன்று செயல்திட்டங்கள் மாணவிகள் எளிதில் புரிந்து கொண்டு செயல்பட வாய்ப்பாக அமைந்துள்ளது மேலும் ராணுவத்தில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதால் குடும்பத்தில் ஒரு மாணவியாவது ராணுவத்தில் சேர வேண்டும் என்று அவர் உரையாற்றினார். முன்னதாக விழாவிற்கு பள்ளியின் தாளாளர் அருள் ஜகோதிரி ஜெய் மேறி பள்ளியின் தலைமை ஆசிரியர் அருள் ஜகோதரி மார்கரேட் மேறி ஆகியோர் விழாவிற்கு தலைமை வகித்தனர். விழாவில் வரவேற்பு நடனம் அணிவகுப்பு மரியாதை உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன மேலும் பள்ளியின் நான்கு அணிகளின் தலைவிகள் மற்றும் துணைத் தலைவிகள் தேர்வு செய்யப்பட்டு பதாதைகள் வழங்கப்பட்டன.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment