குப்பைகளால் நோய் பரவும் அபாயம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 3 July 2024

குப்பைகளால் நோய் பரவும் அபாயம்




நீலகிரி மாவட்டம் எமரால்டு பகுதி ஒரு சுற்றுலா தளம் ஆகும். எமரால்டு பஜார் பகுதியில் இருந்து எமரால்டு அணைக்கு செல்லும் வழியில் மதுபான கடை ஒன்று உள்ளது. அப்பகுதியில் அன்றாடம் மததுபிறியர்களால் ரேஷன் கடைகளுக்கு செல்லும் மகளிர்கள் முகம் சுழிக்கும் நிலை ஏற்படுகிறது  மற்றும் அரசு மேல்நிலை பள்ளிக்கு மாணவ மாணவிகளும் இந்த வழியாகவே நடந்து வருகின்றனர். 



தபால் தந்தி அலுவலகம் செல்லும் நடைபாதையில் ஜூஸ் பிளாஸ்டிக் பாட்டில்கள் தின்பண்டங்கள் பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் பிளாஸ்டிக் டம்ளர் தண்ணீர் பாட்டில்களை வீசி செல்கிறார்கள் பொது இடங்களில் மது அருந்தக்கூடாது. புகைப்பிடித்தல் கூடாது என்று சட்ட விதிமுறைகள் பல இருந்தும் கூட இந்த செயல்களை செய்கின்றனர் மது பிரியர்கள். இப்பகுதிகள் குப்பை மேடாகவே காட்சியளிக்கின்றது. டீக்கடை மளிகை கடைக்காரர்கள் குப்பைகளை டாஸ்மார்க் பின்புறம் உள்ள மக்கள் செல்லும் நடைபாதை சாலையில் வீசி செல்கின்றனர் டாஸ்மாக் கடைக்காரர்கள் மது பாட்டில்கள் அட்டை சுவர்கள் குப்பைகளையும் குடிநீர் செல்லும் பைப் மேல் கொட்டி தீயிட்டு செல்கிறார்கள். இதேபோல் கோழி கடைக்காரர்கள் மாலை ஆறு மணி முதல் 10:00 மணிக்குள் கோழிக்கறி கழிவுகளை டாஸ்மாக் கடை பின்புறம் சாலை ஓரமாக கொட்டி விடுகிறார்கள்.


    இதனால் மிகவும் துர்நாற்றம் வீசுகின்ற காரணத்தால் வனவிலங்குகள் அப்பகுதியில் வந்து செல்கின்றது கழிவுகளை உண்பதால் விலங்குகள் இறக்கும் அபாயம் உள்ளது பறவைகளும் இறக்கும் நிலை ஏற்படுகிறது குப்பைகளை தீயிட்டு கொளுத்துவதால் மாசு கட்டுப்பாடு இல்லாமல் இயற்கை வளம் பாதிப்பு ஏற்படுகிறது ஆகவே கடைகளில் அருகில் குப்பை தொட்டிகள் அமைத்து இதை சரி செய்து தருவார்களா முள்ளிகூர் ஊராட்சிக்கு பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் எமரால்டு பகுதி ஊழியர்கள் கோரிக்கை அவர்களுடன் சேர்ந்து இந்த பகுதியை சுத்தம் செய்து இதற்கு மேல் இது போன்ற மது பிரியர்களின் நடவடிக்கை தொடராவண்ணம்  காவல்துறையினரும் முள்ளிகூர் ஊராட்சி நிர்வாகத்தினரும்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக குரல் செய்தி குழுமத்தின் சார்பாக கோரிக்கை விடுக்கிறோம். 


                         தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad