தமிழ்நாடு தொண்டு நிறுவனங்கள் கூட்டமைப்பின் சார்பில் உதகை , சி.எஸ். ஐ, சி.எம். எம். மேல்நிலைப் பள்ளியில் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நீலகிரி மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் திருமதி பிரவீனா தேவி மற்றும் சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சி. முத்தரசு அவர்களும் விழிப்புணர்வு நிகழ்வினை தலைமை ஏற்று நடத்தினர். நிகழ்வின் முதல் பகுதியாக சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்விற்காக ,பள்ளி மாணவ மாணவியர்கள் ஹீலியம் பலூன்களை பறக்க விட்டனர் .
அதைத்தொடர்ந்து மாணவர்களுக்கு விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தமிழ்நாடு தொண்டு நிறுவனங்கள் கூட்டமைப்பின் மாநில துணைத்தலைவர் சுரேஷ் ரமணா அனைவரையும் வரவேற்றார். காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.முத்தரசு அவர்கள் போதை பொருட்களின் வகைகள் அவைகளை பயன்படுத்தினால் அல்லது வைத்திருந்தால் கிடைக்கும் தண்டனைகள் குறித்து எடுத்துரைத்தார்.
சமூக நலத்துறை அலுவலர் திருமதி. பிரவீனா தேவி மாணவ மாணவியர்கள் நல்ல நண்பர்களுடன் பழக வேண்டும், மற்றும் போதைப் பொருட்கள் மூலம் ஏற்படும் பாதிப்புகளை பற்றி கூறினார். டாக்டர் .பிலிப்ராஜ் ரவி செஞ்சிலுவைச் சங்கம், திரு. மோகன்ராஜ் போபியா டிரஸ்ட், திரு .குணசீலன் போன்றோர் பாடல்கள் மற்றும் பொம்மை நாடகம் வழி விழிப்புணர்வு கொடுத்தது மாணவர்களை உற்சாகமடைய வைத்தது. அதைத் தொடர்ந்து , தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நீலகிரி மாவட்ட தலைவர் திரு முகமது ஃபரூக் தன் வாழ்க்கையை எடுத்துக்காட்டாக கூறி உறையாற்றினார் .
முன்னாள் பள்ளி மாணவர்களான திரு. டேனியல் ,திரு. தஸ்தகீர் பள்ளிக்கு வருகை தந்து மாணவர்களிடையே பேசியது சிறப்பாக அமைந்தது. பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி. வளர்மதி வினோதா நன்றி உரை ஆற்றினார் பள்ளியின் என்சிசி அலுவலர் ஜேக்கப் தாமஸ் ,மற்ற ஆசிரியர்களின் பங்கேற்பு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த உதவியது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதையாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment