நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதியில் காலங்காலமாக நடத்தப்பட்டுவரும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக 11/07/2024-லிருந்து தினமும் காலை 09.00 மணியிலிருந்து மாலை 05.00 மணி வரை உண்ணாவிரதப் போராட்டம் (உணவு தவிற்பு போராட்டம்) கூடலூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட மாணிக் கல்லாடி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் அப்பாவி மக்கள் தங்களது வீட்டின் முன் எதிர்ப்பு பதாகைகளை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தின் மூலம் முன்வைக்கப்படும் கோரிக்கைகள்..
1) வனம் மற்றும் விவசாய நிலங்களை வரையறை செய்து விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.
2) கூடலூரில் காலங்காலமாக நடந்து வரும் மனித உரிமை மீறல்களுக்கு முடிவு கட்ட வேண்டும்.
3) விவசாய பயிர்கள் மற்றும் மனித உயிர்களை அழிக்கும் வன விலங்குகளை அவசரமாக கட்டுப்படுத்த வேண்டும். வனவிலங்குகளின் ஆக்கிரமிப்பை நிரந்தரமாக தடுப்பதற்கான தொலைநோக்குத் திட்டங்களை உருவாக்க வேண்டும்
4) புதிய யானை வழித்தடங்கள் வரைவு அறிக்கை முற்றிலுமாக கைவிடவேண்டும்.
கூடலூர் மக்கள் வனம் மற்றும் வன விலங்குகளுக்கு எதிரானவர்கள் அல்ல... மனிதர்களுக்கும் இங்கு வாழும் உரிமை உண்டு...
யாரையும் தொந்தரவு செய்யாமல், சட்டங்களை மீறாமல் நம் வீடுகளிலும் பணியிடங்களிலும் இந்த போராட்த்தை நடத்துவோம்..
நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டால் ஒட்டுமொத்த கூடலூர் தொகுதியை போராட்டக்களமாக மாற்றமுடியும். அத்துடன் வலுவான மக்கள் ஒற்றுமையும் உருவாக்க முடியும் என்ற தனித்துவ எண்ணத்துடன் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்தப் போராட்டத்திற்கு பல கட்சி சார்ந்தவர்களும் வணிகர் சங்கங்களும்,சமூக ஆர்வலர்களும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கூடலூர் தாலுகா செய்தியாளர் நௌசாத் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.
No comments:
Post a Comment