நீலகிரி மாவட்டம் குன்னூர் மார்க்கெட் பகுதியில் நேற்று நள்ளிரவில் புகுந்த மர்ம நபர் அங்குள்ள ஐந்து கடைகளில் பூட்டுகளை உடைத்து திருடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்..அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது தகவல் அறிந்த குன்னூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் மேலும் சிசிடிவியில் பதிவாகியுள்ள காட்சியை வைத்து திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.
மேலும் நகராட்சிக்கு சொந்தமான மார்க்கெட் பகுதியில் உள்ள நுழைவாயில் கேட்டுகள் பூட்டப்படாததாலும் மார்க்கெட் காவலாளிகள் இல்லாததாலும் இது போல் திருட்டு முயற்சியில் மர்ம நம்பர்கள் ஈடுபடுகின்றனர் எனவே நகராட்சி நிர்வாகம் காவலாளிகளை நியமிக்க வேண்டும் என மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளனர். ஊட்டியில் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு நடந்த திருட்டின் தொடர் சம்பவமாக குன்னூர் மார்க்கெட் பகுதியிலும் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளதால் வியாபாரிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment