குன்னூர் பெட்டட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாமினை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார் சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 6 July 2024

குன்னூர் பெட்டட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாமினை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார் சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன்



   நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊராட்சி ஒன்றியம் பெட்டட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் நடைபெற்ற மருத்துவ முகாமினை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் கா ராமச்சந்திரன் அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து மருத்துவ முகாமினை பார்வையிட்டு பத்து பயனாளிகளுக்கு தல ரூபாய் 1000 மதிப்பிலான மருந்து பெட்டகங்களையும் 11 பயணிகளுக்கு தலா ரூபாய் 2000 மதிப்பிலான ஊட்டச்சத்து பெட்டகங்கள் என மொத்தம் 21 பயனாளிகளுக்கு ரூபாய் 32,000 மதிப்பீட்டிலான மருந்து பெட்டகங்கள் மற்றும் ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார் அமைச்சர்.


 பின்னர் சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு பொறுப்பேற்றதிலிருந்து மக்கள் நலன் காக்க பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக மருத்துவம் மற்றும் கல்வி ஆகிய இரண்டு துறைகளை தனது இரண்டு கண்கள் என கூறுவதற்கு இணங்க தற்போதைய நிதியாண்டில் கூட இந்த இரண்டு துறைகளுக்கு அதிகப்படியான நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.


 மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மகளிர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தினால் சமூகம் முன்னேறும் என்ற அடிப்படையில் மகளிர்களுக்கு மாதந்தோறும் தலா ரூபாய் 1000 உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நமது மாவட்டத்தில் ஏற்கனவே 1.14 கோடி மகளிர்களுக்கு உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. 


மேலும் புதியதாக 1.48 இலட்சம் மகளிர்க்கு உரிமை தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அதேபோல் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று உயர்கல்விக்கு செல்லும் மாணவியர்களுக்கு மாதந்தோறும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் தலா ரூபாய் ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது மேலும் தமிழ் புதல்வன் என்ற திட்டத்தின் கீழ் விரைவில் மாணவர்களுக்கும் மாதம்தோறும் தலா ₹ 1000 வழங்கும் திட்டம் அரசால் துவங்கப்பட உள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தர விற்கிணங்க  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலை நாடுவோர்களுக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது நமது மாவட்டத்தில் உதகை குன்னூர் மற்றும் கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசின் முத்தான திட்டமான காலை உணவு திட்டம் நமது மாவட்டத்தில் செயல்படுத்தியது மூலம் மாணவ மாணவியர்கள் அரசு பள்ளிகளுக்கு வரும் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 1.80 இலட்சம் மாணவர்கள் பயன் பெற்று வருகிறார்கள் இத்திட்டமானது வருகிற 15ஆம் தேதி முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது . 


அதேபோல் சுகாதாரத் துறையின் சார்பில் இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 மணி நேரம் திட்டம் மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது அதன்படி நமது மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 1,67,317 நபர்கள் பயன் பெற்றுள்ளனர் மேலும் இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 மணி நேரம் திட்டத்தின் கீழ் 975 அவர்களும் கலைஞர் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் 30,653 அவர்களும் பயன் பெற்றுள்ளனர் என அறிவித்தார். இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ள இந்த வருமுன் காப்போம் சிறப்பு முகாம் மூலம் கிராமங்கள் மற்றும் நகர்புற பகுதிகளுக்கு மருத்துவக் குழுவினர் நேரில் சென்று பொதுமக்களுக்கு பரிசோதனை மேற்கொள்வார்கள் அப்பொழுது பொதுமக்களுடைய பல்வேறு நோய்கள் இருக்கும் பட்சத்தில் தொடக்க நிலையில் அதனை கண்டறிந்து மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்வார்கள்.


 இன்று நடைபெற்று வரும் இந்த மருத்துவ முகாமில் பொது மருத்துவர் அறுவை சிகிச்சை மருத்துவர் குழந்தை நல மருத்துவர் உள்ளிட்ட 15 வகையான சிறப்பு மருத்துவர்கள் நீரிழிவு நோய் ரத்த அழுத்தம் இருதய நோய் காசநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் குறித்து பரிசோதனை மேற்கொண்டு மருந்து மாத்திரைகள் வழங்குவார்கள் அனைத்து கர்ப்பிணி தாய்மார்களும் சிறப்பு இரத்த பரிசோதனையும் மேற்கொள்ளும் வகையில் முகாம் நடைபெற்று வருகிறது மேலும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் அடிப்படை மருத்துவ பரிசோதனை மற்றும் தேவையான இரத்த பரிசோதனைகள் இங்கு மேற்கொள்ளப்படுகிறது எனவே இது போன்ற முகாம்களை பொதுமக்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார் இந்நிகழ்ச்சியில் துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் பாலுசாமி குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் திரு சதீஷ் குன்னூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுனிதா நேரு   ஜெகதளா பேரூராட்சி தலைவர் பங்கஜம் வட்டாட்சியர்கள் கனி சுந்தரம் குன்னூர் த. கோமதி கோத்தகிரி கேத்தி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் மகாலட்சுமி மருத்துவர்கள் உட்பட அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டு அமைச்சர் கா ராமச்சந்திரன் உடனிருந்து முகாமினை சிறப்பாக வழி நடத்தினர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad