நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சி சந்தை கட்டிடங்கள் சில மாதங்களுக்கு முன்பு பழைய கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தி புதிதாக கடைகள் கட்ட இருப்பதால் அங்கிருந்த வியாபாரிகளுக்கு ஏடிசி அருகே ரேஸ்கோர்ஸ் கிரவுண்டில் தகர செட்டுகள் அமைத்து கொடுக்கப்பட்டது.
இடிக்கப்பட்ட மார்க்கெட்டின் கழிவுகள் அனைத்தும் புதிதாக கட்டப்பட்ட கடைகளின் அருகில் கொட்டப்பட்டுள்ளன மேலும் இங்கு மாற்றப்பட்ட கோழிக் கடைகள் மற்றும் காய்கறி கழிவுகள் அதே இடத்தில் போடப்படுகின்றது. குப்பை அகற்றுவதில் மிக அலட்சியமாக நகராட்சி நிர்வாகம் செயல்படுவதால் கோழி கழிவுகளை காக்கைகள் எடுத்து சாப்பிடுவதுடன் அனைத்து பகுதிகளிலும் கழிவுகளை போடுகின்றன. இதுபோக இந்த பகுதியில் உலா வரும் எலிகள் அனைத்து கடைகளையும் துவம்சம் செய்கின்றன இரவு சரி செய்து சென்றால் காலையில் அதைவிட பெரிதாக பெயர்த்து வைக்கின்றன இதன் காரணமாக அனைத்து வியாபாரிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். மற்றும் இந்த பகுதியில் பார்க்கிங் வசதி இல்லாத காரணத்தால் நுகர்வோர் வருவது மிக குறைவாகவே உள்ளது.
இதனால் பல கடைகள் திறக்கப்படாமல் கிடக்கிறது. 6000 ரூபாய்க்கு மேல் வாடகை மற்றும் ஈ பி பில் வேலை செய்பவர்களுக்கு கூலி போன்றவைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள வியாபாரிகள் எப்படி பிழைப்பது வாழ்நாளை எப்படி ஓட்டுவது என்று மிகவும் கவலையில் இருப்பதாக தெரிவிக்கின்றனர் மேலும் அவர்கள் தெரிவிக்கும் போது காக்கைகள் எலிகள் மற்றும் சிறுநீர் கழிப்பதற்கு பொது இடம் இல்லாததால் பொதுமக்கள் அங்கே சிறுநீர் கழிப்பதாலும் ஏற்படுத்தும் சுகாதார சீர் கேட்டால் இந்த பகுதியில் ஏதாவது வியாதிகள் வந்து விடுமோ என்று அச்சத்திலும் இருப்பதாக தெரிவிக்கின்றனர் வியாபாரிகள். நகராட்சி நிர்வாகம் அக்கரைப்படாமல் வாடகைக்கு நோட்டீஸ் நோட்டீஸ் மட்டும் கொடுக்கிறார்கள் உடனடியாக நகராட்சி நிர்வாகம் வியாபாரிகளுக்கு பொதுமக்களுக்கும் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment