நீலகிரியில் ஓய்வூதியர்களுக்கு மருத்துவ பரிசோதனை
உதகை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி வளாகத்தில் நீலகிரி மாவட்ட ரெட் கிராஸ் சொசைட்டி ஸ்டேட் பாங்க் மற்றும் நீலகிரி மேற்கு ரோட்டரி கிளப் சார்பில் ஓய்வூதியர்களுக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. ஸ்டேட் பேங்க் வங்கி முதன்மை மேலாளர் தரமேஷ்பாபு மாவட்ட ரெட் கிராஸ் சேர்மன் கேப்டன் கே ஆர் மணி துணை சேர்மன் பேராசிரியர் கே கோபால் செயலாளர் ஆசிரியர் அ. மோரிஸ் சாந்தா குருஸ் கோட்டாட்சியர் மகாராஜ், நகராட்சி ஆணையாளர் ஏகராஜ் ரோட்டரி கிளப் தலைவர் சச்சிதானந்தம், செயலாளர் லீனா ராஜேஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மருத்துவர்கள் கோவை எஸ் பி டி மருத்துவமனை மருத்துவர்கள் சங்கவி ஹரி உதகை மருத்துவர் திவ்யா ஆகியோர் தங்கள் குழுவினருடன் இணைந்து முகாமினை நடத்தினார்கள் இந்த முகாமின் மூலம் 150 க்கு மேற்பட்டோர் பயனடைந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment