கூடலூர் நெடுஞ்சாலையில் சாண்டி நல்லா பகுதியில் மரம் சாலையில் விழுந்தது
நீலகிரி மாவட்டம் உதகை சோலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சாண்டி நல்லா பகுதியில் கூடலூர் நெடுஞ்சாலையில் நேற்று இரவு அதிபயங்கரமான சூறாவளி காற்று வீசியதால் மரம் சாலையில் விழுந்தது. இதனால் உதவகையிலிருந்து கூடலூர் மைசூர் செல்லும் பேருந்துகளும் கூடலூர்லிருந்து இருந்து ஊட்டி கோயம்புத்தூர் திரும்பும் பேருந்துகளும் மற்றும் இதர வாகன ஓட்டிகளும் போக்குவரத்து இடையூறுக்கு ஆளாகினர். தற்பொழுது தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்ததின் பெயரில் அவர்கள் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திற்கு வந்து மரத்தை அகற்றி சீர் செய்து தருவார்கள் என கூறியுள்ளார்கள்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment