கல்வி வளர்ச்சி நாள் கருத்தரங்கு.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கூக்கல்தொரை அரசு உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பொறுப்பு திரு. ஆனந்த் அவர்கள் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு. கே. ஜே. ராஜு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய போது கூறிய கருத்துக்கள்.....
காமராஜர் அவர்கள் எளிமையான வாழ்க்கைக்கு உதாரணமாக கூறுவார்கள் தம் வாழ்வின் கடைசி நாள் வரை ஐந்து கதர் சட்டைகளைத் தவிர வேறு எதுவும் அவருக்கு சொத்தாக இருக்கவில்லை அவருடைய காலத்தில் தான் விவசாய வளர்ச்சிக்காக தமிழ்நாட்டில் 40 சிறு குறு அணைக்கட்டுகள் கட்டப்பட்டன தமிழ்நாட்டின் கல்விக் கண்ணை திறந்தவர் காமராஜர் அவர்கள்.
அவர் முதலமைச்சராக இருந்த பொழுது தமிழ்நாட்டில் உள்ள 40 ஆயிரம் கிராமங்களில் பள்ளிகளை திறப்பதற்கான வழி வகைகளை ஆராய்ந்து செயல்படுத்தியவர் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள செல்வந்தர்களை நிலம் மற்றும் கட்டிடத்தை இலவசமாக தருமாறு வேண்டினார் அந்த கிராமத்தில் எட்டாம் வகுப்பு வரை படித்த இளைஞர்களை ஆசிரியர்களாக நியமித்தார் இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஐந்தாவது வரை படிப்பதற்கான கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்தினார் மாணவ மாணவியர்களுக்கு மதிய உணவை கொடுத்து அவர்களை பள்ளிக்கு வரவழைத்தவர் என்பதை நாம் அனைவரும் அறிவோம் பின்னர் 5 கிலோமீட்டர் தொலைவில் ஒரு நடுநிலைப்பள்ளி 10 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு உயர்நிலைப் பள்ளியும் ஏற்படுத்தினார் இன்று தமிழகத்தினுடைய கல்வி வளர்ச்சிக்கு வித்திட்டவர் காமராஜர் கல்வி என்பது மனிதர்களை உருவாக்கும் ஒரு செயல்பாடு மனிதர்களுக்கு ஒழுக்கமும் சிறந்த குடிமக்களை உருவாக்கும் கல்வி கொடுக்கப்பட வேண்டும் என அனைத்து கல்வியாளர்களும் விரும்பினார்கள் ஆனால் இன்று காலமாற்றத்தின் காரணமாக கல்வி என்பது நமது நாட்டிற்கானது அல்ல பன்னாட்டு நிறுவனங்களினுடைய வியாபாரத்தை இந்தியா முழுவதும் நிர்வகிப்பதற்கான ஒரு அமைப்பாக மாறி உள்ளது வருந்தத்தக்கது.
நமது நாட்டில் எழுத்தறிவு கணிசமாக உயர்ந்துள்ளது ஆனால் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான அறிவியல் எழுத்தறிவு வளரவில்லை என்பது வருந்தத்தக்கது.
உலக அளவில் தென்கொரியா நாடு தான் அறிவியல் எழுத்தறிவில் முதல் நிலையில் உள்ளது அதாவது அந்த நாட்டில் 85 சதவீதம் பேர் அறிவியல் எழுத்தறிவு பெற்றவர்களாக உள்ளனர் அடுத்ததாக சீனாவில் 70% அறிவியல் எழுத்தறிவு பெற்றுள்ளனர் நமது இந்தியாவை பொருத்தவரை அறிவியல் எழுத்தறிவு என்பது ஒற்றை இலக்கத்தில் உள்ளது என்பது மிகவும் வருந்தத்தக்கது அறிவியலும் தொழில்நுட்பமும் தான் என்றும் உலகை ஆளுகின்றன நமது மாணவர்களுடைய லட்சியமே கார்ப்பரேட் தளநிறுவனங்களுக்கு கூலிப்பணியாக செல்வது என உள்ளது மாணவர்கள் அறிவியல் துறையில் தொழில் முனைவோராக மாற வேண்டும் நமது மாணவர்களின் அறிவியல் அறிவும் திறமையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தான் பயன்படுகிறது ஒரு இந்திய மாணவர் 5 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு கையடக்க லேப்டாப்பை கண்டுபிடித்தார் ஆனால் அவரது கண்டுபிடிப்பு நமது மக்களுக்கு பயன்படாத வகையில் பன்னாட்டு நிறுவனங்கள் பார்த்துக் கொண்டன இன்று நமது நாட்டில் உற்பத்தி என்பது இயற்கை வளங்களை சுரண்டுவது என்பதாக தான் உள்ளது உற்பத்தி என்பது பெருமளவில் நடைபெறவில்லை இதனால் வேலை வாய்ப்புகள் குறைவாக உள்ளது சீனாவில் உள்ளதை போல மாணவர்கள் படிக்கும்போதே தொழிற்சாலைகளில் பயிற்சி பெரும் வகையில் கல்வி அமைய வேண்டும் நவீன அறிவியல் வளர்ச்சிகளை கருத்தில் கொண்டு மாணவர்கள் தங்கள் சிந்திக்கும் ஆற்றலையும் அறிவித்திறனையும் வளர்த்துக் கொள்ளும் வகையில் கல்வி அமைய வேண்டும் என்பன போன்ற பல கருத்துக்களை ஆசிரியர் திரு.கே.ஜே. ராஜூ அவர்கள் கூறினார். ஓவியம் கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு. டட்லி ஆதிதிராவிட மாணவர்கள் தங்கும் விடுதி பொறுப்பாளர் திரு. வேணுகோபால் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் ரஆசிரியர் திரு. பாலமுருகன். அவர்கள் அனைவரையும் வரவேற்றார் திரூ. ரவிக்குமார் அவர்கள் நன்றி கூறினார்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment