நீலகிரி மாவட்டம் கோத்தகிரி காமராஜர் சிலை வளாகத்தில் கோத்தகிரி வட்டார காங்கிரசார் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 122 வது பிறந்த நாள் விழா கோத்தகிரி வட்டார காங்கிரஸ் தலைவர் திரு. சில்லபாபு அவர்கள் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது.
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் திருமதி. ஜெயக்குமாரி, திரு. வீரபத்திரன், கீழ்-கோத்தகிரி வட்டார காங்கிரஸ் தலைவர் திரு.மணி தொழிற்சங்க தலைவர்கள், உட்பட கோத்தகிரி மற்றும் கீழ்- கோத்தகிரி காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து பெருந்தலைவர் திரு. காமராஜர் அவர்களின் 122 வது பிறந்தநாள் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நீலகிரி மாவட்ட காங்கிரஸ் தலைவரும் உதகை சட்டமன்ற உறுப்பினரும் ஆன திரு. கணேஷ் அவர்களுடன் இணைந்து மிளிதேன் அரசு பள்ளி மாணவ மாணவியருக்கு கேடயம், பரிசு பொருட்கள், இனிப்புகள் வழங்கிய கோத்தகிரி மற்றும் கீழ் கோத்தகிரி காங்கிரஸ் உறுப்பினர்கள் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment