நீலகிரி விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி அறிவிப்பு
நீலகிரி மாவட்ட விவசாயிகள் அடுத்த 20 நாட்கள் மழையின் தாக்கமின்றி விவசாய பணி மேற்கொள்ளலாம் என வானிலை ஆய்வாளர் திரு. சந்தோஷ்கிருஷ் அவர்கள் தெரிவித்தார்.
தென்மேற்கு பருவ மழை நாளையிலிருந்து வலு குறையும். பாலக்காடு கணுவாயில் உள்ள விவசாயிகள் மற்றும் மேற்கு கோயம்புத்தூரில் உள்ள விவசாயிகள், நீலகிரி விவசாயிகள் அடுத்த 20 நாட்களுக்கு தங்களது விவசாய பணிகளை எந்த மழை இடையூறும் இன்றி தொடரலாம்.
வடக்கு கொங்கு மண்டலம் அதாவது அவிநாசி ரோடுக்கு வடக்கே வெப்ப சலன மழை நாளை முதல் படிப்படியாக அதிகரிக்கும். ஆகஸ்ட் இரண்டாவது மற்றும் மூன்றாவது வாரத்தில் கொங்கு சமவெளி பகுதிகளில் நல்ல வெப்ப சலன மழையை நாம் எதிர்பார்க்கலாம்.
ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு பின்னர் நாம் மீண்டும் தென்மேற்கு பருவ மழை எதிர்பார்க்கலாம். என கோவை வெதர்மேன் திரு. சந்தோஷ்கிருஷ் அவர்கள் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பானது நீலகிரி மாவட்ட விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment