தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு
உதகை நகர திமுக சார்பில் - கழக கொடியேற்றி நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி
மாவட்ட செயலாளர் – சுற்றுலாத்துறை அமைச்சர் நலத்திட்டங்களை வழங்கி சிறப்புரை.
முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு வழாவை முன்னிட்டு உதகை நகர திமுக சார்பில் உதகை நகர செயலாளர் ஜார்ஜ் அவர்கள் தலைமையில் கழக கொடியேற்று விழா மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது,
உதகை கேசினோ சந்திப்பில், மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக் அவர்கள் கொட்டும் மழையில் கழக கொடியேற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார்.
தொடர்ந்து மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் அவர்களும், கழக தேர்தல் பணி செயலாளர் – மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் அவர்களும் நலத்திட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட அவை தலைவர் போஜன், மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இளங்கோ, ராஜூ, குன்னூர் ஒன்றிய செயலாளர் பிரேம்குமார், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்
நிகழ்ச்சியில் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் ராஜா, காந்தல் ரவி, எல்கில் ரவி, செல்வராஜ், ராமசந்திரன், ரஹமத்துல்லா, உதகை நகர துணை செயலாளர் ரீட்டா, நகர பொருளாளர் அணில்குமார், மாவட்ட பிரதிநிதிகள் கார்திக், தம்பி இஸ்மாயில், நகரமன்ற உறுப்பினர்கள் ரமேஷ், விஷ்னு, கஜேந்திரன், ரகுபதி, வனிதா, பிரியா வினோதினி, மேரி பிளோரீனா உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment