நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி ஒரு சிறந்த சிறப்பு மிக்க ஒரு சுற்றலா தலமாகும். அந்த சுற்றுலாத்தளத்தில் போதிய மழை இல்லாத காரணத்தினால் ஒரு இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு அங்குள்ள சிறு சிறு அருவிகள் குளங்கள் குட்டைகள் எல்லாம் வறண்டு போய் கிடந்தன. நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் அங்குள்ள அருவிகள் குட்டை குளம் அனைத்தும் நிரம்பி வழிந்து ஓடுகிறது. இந்த நேரத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக உள்ளது அவர்கள் வரும் நேரத்தில் இது போன்ற பொக்கிஷமான காட்சி கிடைத்தால் அவர்கள் குடும்பத்தோடு இயற்கையின் அழகை கண்டு இயற்கையோடு மிதந்து முத்து போன்ற மழை துளிகளில் நனைந்து மகிழ்ச்சி பெற்று செல்வார்கள்..
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment