நீலகிரி மாவட்டம் குன்னூர் தாலுகா மேலூர் கிராம பஞ்சாயத்தில் பராமரிப்பு இன்றி இருக்கும் கழிப்பிடம்
தூதூர்மட்டம் திலகர் நகர் பகுதியில் மகளிர் மற்றும் ஆண்கள் செல்லும் கழிப்பறை பாதுகாப்பின்றி புல் புதராக வளர்ந்து கிடப்பதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகிறார்கள் பலமுறை பஞ்சாயத்து அலுவலகத்தில் சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை மேலூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் அதிகாரிகள் மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர்கள் இருக்கிறார்களா? அதிகாரிகள் தங்கள் பணியை செய்து இருந்தால் இதுபோன்று பராமரிப்பு இன்றி கழிப்பிடம் இருக்குமா? சுற்றுலாத்துறை அமைச்சரின் சொந்த மாவட்டமான நீலகிரியில் இதுபோன்ற அலட்சியமாக அதிகாரிகள் செயல்படுவது மக்கள் மத்தியில் பல கேள்வி எழுந்துள்ளது மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட கழிப்பிடத்தை சுத்தம் செய்து மக்கள் பயன்படுத்தும் வகையில் சரிசெய்ய வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment