அரசு மேல்நிலை பள்ளிகளுக்கு வனப்பகுதியில் இருந்து வரும் மாணவ மாணவிகளுக்கு வாகன வசதி செய்யப்பட்டுள்ளது
நீலகிரி மாவட்டம் குன்னூர் அதிகரட்டி நெடுகாடு பகுதிகளுக்கு அருகில் உள்ள செலவிப் நகர் முட்டி நாடு மணியபுரம் பகுதிகளில் அதிக வன விலங்குகள் நடமாடி வருகிறது.இந்த பகுதியில் இருந்து வரும் பள்ளி குழந்தைகளுக்கு வாகன வசதிகள் இல்லாமல் பல சிரமங்களுக்கு ஏற்பட்டு பல ஆண்டுகளாக வாகன வசதி வேண்டும் என்று ஆசிரியர்கள் பெற்றோர்கள் பள்ளி கல்வி துறை அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் போதிய பலன் கிடைக்கவில்லை. இந்த ஆண்டு புதிதாக தலைமை ஆசிரியராக பொறுப்பு ஏற்று இருக்கும் பிரியா ராமகிருஷ்ணன் அவர்கள் மற்றும் ஆசிரியர்கள் SMC PTA மற்றும் மாவட்ட பள்ளி கல்வி துறை அதிகாரிகள் முயற்சியால் பள்ளி மாணவ மாணவிகள் வன விலங்குகளிடம் இருந்து பாதுகாக்க வாகன வசதி செய்யப்பட்டுள்ளது தமிழக அரசுக்கும் வாகன வசதிக்காக பெரும் முயற்சி செய்த அனைவருக்கும் பெற்றோர்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment