பெருந்தலைவர் வயிற்றுக்கு உணவளித்த காமராசரின் 122 வது பிறந்த நாளை முன்னிட்டு கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் கூடலூர் அரசு இரத்த வங்கி வட்டார சுகாதார நிலையம் ஆல் த சில்ரன் மற்றும் சமத்துவ சேவை குழு ஆகிய சார்பில் நடைபெற்ற இரத்ததான முகாமிற்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.
கப்பாலா அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சுகைப் இரத்த தானம் வழங்கி முகாமினை துவக்கி வைத்தார் கூடலூர் அரசு இரத்த வங்கி மருத்துவ குழுவினர் மஞ்சு வசத் நாராயணமூர்த்தி சிவஞானம் உள்ளிட்டோர் அரங்கே குழுவினர் இரத்தம் சேகரித்தனர் இதில் 12 பேர் ரத்த தானம் செய்தனர் ரத்ததானம் செய்வதற்கு எருமாடு பகுதியைச் சேர்ந்த பிரதீப் குமார் சங்கீதா தம்பதிகளின் இரண்டு வயது குழந்தை ரக்சித்ரிகான் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கினர். தொடர்ந்து இரத்த தானம் செய்த கொடையாளர்களுக்கு அரசு பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆல் த சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் சமத்துவ சேவை குழு தலைவர் அன்பழகன் செயலாளர் சந்திரசேகரன் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment