இன்று காலை 10 மணி அளவில் குன்னூர் பெட் போர்ட் பகுதியில் அரசு பேருந்து வந்து கொண்டிருந்தபோது அவ்வழியாக சென்ற இருசக்கர வாகன ஓட்டி விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். அரசு பேருந்தின் எதிர் திசையில் வந்த இருசக்கர வாகனம் நிலை தடுமாறியதில் இந்த விபத்து ஏற்பட்டது.இந்த இழப்பு அவர் குடும்பத்திற்கு மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் மிகவும் கவனமாக வாகனங்களை இயக்குமாறு தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள பிரிவின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment