உதகையில் ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 1 July 2024

உதகையில் ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்

     


   கோவை எஸ். என். ஆர்.  சன்ஸ் அறக்கட்டளையின்கீழ் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் சார்பில் 30.06 2024 ஞாயிற்றுக்கிழமை அன்று தேவாங்கர் கல்யாண மண்டபம் உதகையில் மாபெரும் இலவச மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை ஆலோசனை முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது.      எஸ். என் ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் உயர்திரு டி. லஷ்மி நாராயண சுவாமி அவர்களின் வழிகாட்டுதல்படி நடைபெற்ற இலவச மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை ஆலோசனை முகாமை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தர வடிவேல் தொடங்கி வைத்தார். எஸ். என் ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் சி இ ஓ  சி. வி ராம்குமார் மருத்துவ இயக்குனர் டாக்டர் ராஜகோபால் மருத்துவ கண்காணிப்பாளர் அழகப்பன் மக்கள் தொடர்பு மேலாளர் முனைவர் பிரகதீஸ்வரன். ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாபெரும் இம்முகாமில் இதுபோன்ற துறைகளுக்கான மருத்துவ நிபுணர்களால் இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்பட உள்ளது. மேலும் முகாமின் சிறப்பு அம்சங்களாக அறுவை சிகிச்சை தேவைப்படுவோர்களுக்கு 25% வரை கட்டண சலுகை வழங்கப்பட உள்ளது அதனோடு சராசரி இரத்த சர்க்கரை அளவு பி எம் ஐ இரத்த அளவு  ஆகியவற்றிற்கு இலவச பரிசோதனை அளிக்கப்படுகிறது அது மட்டுமல்லாமல் கர்ப்பப்பை பரிசோதனை எக்கோ கார்டியோகிராம். ஈ சி ஜி எலும்பு அடர்த்தி சோதனை அடிவயிற்று ஸ்கேன் போன்றவை மருத்துவர்களால் பரிந்துரை செய்பவர்களுக்கு இலவசமாக பரிசோதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது


. அதேபோன்று குடலிறக்கம் ஹெர்னியா மூலம் ஆசனவாய் வெடிப்பு பித்தப்பை கல் கர்ப்பப்பை கட்டிகள் சினைப்பை கட்டிகள் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வெரிகோஸ்  வெயின் புரோஸ்டேட்வீக்கம்  குழந்தையின்மைகான ஆலோசனை தைராய்டு சிகிச்சை இதுபோன்ற பல்வேறு சிகிச்சை தேவைப்படுவோருக்கு சிறப்பு கட்டண சலுகையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சிகிச்சை பெற சலுகை வழங்கப்பட்டுள்ளது. மாபெரும் இலவசம் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை ஆலோசனை முகாமில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் துறைசார் மருத்துவ நிபுணர்கள் செவிலியர்கள் மருத்துவமனை ஊழியர்கள் மாணவர்கள் முழு ஈடுபாட்டுடன் சேவையாற்றினர். இந்த முகாம் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்களுக்கு ஒரு வரப்பிரசாதம் எனக் கூறும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் மிக சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. காலை முதலே பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த முகாமில் கலந்து கொண்டனர் பிற்பகல் வரை 750 பதிவுகள் நடைபெற்றது கிட்டத்தட்ட 1000 பொதுமக்கள் பயன்பெறும் மருத்துவ முகமாக இது சிறப்பு பெற்றுள்ளது. சேவை ஒன்றையே இது தாரக மந்திரமாகக்  கொண்டுள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை எவ்விதக் கட்டணமும் இன்றி பொதுநலன் கருதி இது போன்ற முன்னெடுப்புகளை எடுத்து வருவது பாராட்டுக்குரியது மற்றும் பொதுமக்களுக்கு மிகவும் பயன்பாட்டிற்குரியது. 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad