நீலகிரி பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான, ஐயா மாஸ்டர் மாதன் அவர்களுக்கு அண்ணாமலை மற்றும் ஆளுநர், தலைவர்கள் அஞ்சலி - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 27 July 2024

நீலகிரி பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான, ஐயா மாஸ்டர் மாதன் அவர்களுக்கு அண்ணாமலை மற்றும் ஆளுநர், தலைவர்கள் அஞ்சலி



நீலகிரி பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான, ஐயா மாஸ்டர் மாதன் அவர்கள் இல்லத்துக்கு, தமிழ்நாடு பாஜகவின் தலைவர் அண்ணாமலையும் அவருடன் இணைந்து மாண்புமிகு ஜார்க்கண்ட் மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் ஆளுநரும், புதுச்சேரி மாநிலத் துணைநிலை ஆளுநருமாகிய திரு. CP ராதாகிருஷ்ணன் அவர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகளுடன் சென்று, அவரது பூதவுடலுக்கு மலரஞ்சலி செய்து மரியாதை செலுத்தினார்கள்.



திரு. மாஸ்டர் மாதன் அவர்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்தார்கள். அவரது கொள்கைப் பிடிப்பும், பொதுமக்களுக்கான அயராத உழைப்பும், தேசப்பணியில், எங்களை வழிநடத்தும் சக்தியாகத் தொடரும் என்று அண்ணாமலை தெரிவித்தார்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad