பிக்கட்டி பகுதியில் கரடி நடமாட்டம்...
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் செல்லும் சாலையில் பிக்கட்டி என்னும் பகுதியில் மைக்செட் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார் அவரது வீட்டின் அருகே பலமுறை கரடி நடமாட்டம் உள்ளது என இவர் அறிந்த நிலையில். தற்பொழுது இன்று அவர் வீட்டில் உள்ள பொழுது கரடி அவர் வீட்டின் அருகே உலா வந்ததை அவர் தொலைபேசியில் புகைப்படமாக எடுத்துள்ளார். அங்கு அவர் மட்டுமல்லாமல் அவரது குழந்தைகள் குடும்பங்களோடு வாழ்ந்து வருகிறார் இதனால் தினந்தோறும் அவர்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். அதே இடத்தில் பிரியதர்ஷினி மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்று இயங்கி வருவதால் அங்கு வரும் குழந்தைகளுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படுவதற்கு முன் வனத்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment