கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவுகளில் உயிரிழந்தவர்களில் இதுவரை 270 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீட்பு பணியில் ராணுவம், போலீஸார் மற்றும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டாவது நாளாக, புதன்கிழமை காலை முதல் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டக்கை மற்றும் சூரல்மலா பகுதிகளில் இருந்து 270 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், 200 பேர் மாயமாகி உள்ளதாக தெரிகிறது. இதனை அரசு தரப்பு அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத்
கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment