பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட சேரம்பாடி சந்தனம்மாகுன்னு பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் மண் சாலையை பயன்படுத்தி வந்தனர். இந்த பகுதிக்கு சாலை வசதி செய்துதர வேண்டும் என அப்பகுதி மக்கள் சேரங்கோடு ஊராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், சேரங்கோடு ஊராட்சி சார்பில் கான்கிரிட் சாலை போடப்பட்டது. இந்நிலையில், தற்போது தென்மேற்கு பருவமழையின் தாக்கம் பந்தலூர் சுற்று வட்டார பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நேற்று பெய்த தொடர் மழைக்கு கான்கிரீட் சாலையில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத்
கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment