நீலகிரி மாவட்டம் குன்னூர் உலிக்கல் பேரூராட்சி மாதாந்திர கூட்டம் தலைவர் ராதா துணைத் தலைவர் ரமேஷ்குமார் செயல் அலுலர் சுரேஷ்குமார் தலமையில் நடைப்பெற்றது கூட்டத்தில் கவுன்சிலர்கள் குடிநீர் , சாலைவசதி, தெருவிளக்கு நடைப்பாதை போன்ற அடிப்படை தேவைகள் கூட செய்து கொடுக்கப் படவில்லை எனகூறி கூட்டத்தில் வாக்குவாதம் செய்தனர் பின்பு நின்கின்ற வாகனத்தை ஏன் சரிசெய்தாக பணம் எடுத்துள்ளீர்கள் என கூறி அதற்கு மன்றத்தில் கணக்கு காட்ட வேண்டும் என கவுன்சிலர்ள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிகாரிகளுக்கு ஆதரவாக தலைவரும் கவுன்சிலர்களுக்கு ஆதரவாக துணைத்தலைவரும் களத்தில் இறங்க கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது இதனால் கூட்டத்தை விட்டு அனைத்து திமுக கவுன்சிலர்கள் மற்றும் அதிமுக. விடுதலை சிறுத்தை கவுன்சிலர்களும் கூட்டத்தில் இருந்து வெளியேறி அலுவலகம் முன்னே தர்னாவில் ஈடுப்பட்டனன் பின்னர் திமுக. கவுன்சிலர்கள் தலைவரை மாற்ற வேண்டும் என்றும் புதிய தலைவரை தேர்தெடுக்க வேண்டும் என கோரி திமுக. மாவட்ட செயலாளர் பா.மு முபாரக்கை சந்திக்க சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் விஷ்ணு தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment