வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த திமுக வார்டு துணை செயலாளர் காளிதாசன் அவர்களின் உடலுக்கு மாவட்ட திமுக செயலளார் பா.மு.முபாரக் மற்றும் கழக நிர்வாகிகள் நேரில் அஞ்சலி.
30.7.204 வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த, நெல்லியாளம் நகரம் 14-வது வார்டு கழக துணை செயலாளர் காளிதாசன் அவர்களின் உடல் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டு மரப்பாலம் கொண்டுவரப்பட்டது.
31.7.2024 நீலகிரி மாவட்ட திமுக சார்பில், மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் அவர்கள் கழக நிர்வாகிகளுடன் நேரில் சென்று கழக கொடி போர்த்தி, மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி,வ்காளிதாசன் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
உடன் மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் திராவிடமணி, காசிலிங்கம், நெல்லியாளம் நகர செயலாளர் சேகரன், ஒன்றிய கழக செயலாளர்கள் சிவானந்தராஜா, சுஜேஷ், தலைமை கழக சொற்பொழிவாளர் பாண்டியராஜ், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, நகராட்சி தலைவர்கள் சிவகாமி, பரிமளா, கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா, மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் ஆலன், அன்வர்அப்துல்லா, இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் முரளிதரன் உட்பட கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக முன்னணியினர் ஏராளமானவர்கள் உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment