கேரளாவின் வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு தற்போது வரை 162 பேர் பலியானதை அடுத்து மீட்பு பணிகளில் கேரள அரசு மீட்புபடை தமிழக அரசு மீட்பு படை இந்திய ராணுவம் தொண்டு நிறுவனத்தினர் தனியார் தன்னார்வலர்கள் என பல பேர் தொடர் மழையிலும் மீட்புபணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சுற்றுலா சென்றவர்கள் வடமாநில தொழிலாளிகள் தேயிலை தோட்ட பணியாளர்கள் என பலபேர் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது ஆகவே பலி எண்ணிக்கை உயரலாம்.
இயற்கையை அழிக்க நினைத்தால் மனிதன் அடையும் துன்பத்தை உதாரணம் காட்டி எச்சரிக்கிறது. இயற்கையை காத்தால் மட்டுமே மனிதகுலம் தழைக்கமுடியும் என்பதற்க்கு இது இயற்கையின் கடைசி எச்சரிக்கை.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K .A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment