பந்தலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 25 July 2024

பந்தலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம்



பந்தலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று தமிழக அரசின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற முகாம் மாவட்ட ஆட்சியர், மற்றும் துணை ஆட்சியர், மற்றும் கோட்டாட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர், மற்றும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற பொழுது பந்தலூரின் அத்தியாவசிய கோரிக்கைகளான பஜார் மற்றும் கடைவீதிகளில் சுற்றி திரியும் கால்நடைகளுக்கு (ஆடு, மாடுகள்) தகுந்த நடவடிக்கை எடுக்க கோரியும். 


மக்கள் பயன்பாட்டிற்கு இயலாதவாறு அமைந்துள்ள குடிநீர் விநியோக.ATM அனைவருக்கும் பயன்படுமாறு அரசு மேல்நிலைப்பள்ளி அருகாமையில் மாற்ற கோரியும். நெல்லியாலம் வணிக வளாகத்தில் அமைந்துள்ள கழிப்பறையை சீரமைக்க கோரியும். 


பந்தலூர் பஜாரில் உதகை கள்ளிக்கோட்டை சாலை மிகவும் மோசமான நிலையில் அமைந்துள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மற்றும் வியாபாரிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர் எனவே இந்த சாலையை விரைவில் சீரமைக்க கோரியும். 

மேலும் கால்வாய்கள் மோரிகள் சீரமைக்க கோரியும். 

பந்தலூர் புதிய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்றது போல் சீரமைக்க கோரியும். 

பந்தலூர் பஜார் பகுதியில் நீண்ட காலமாக ஏற்படுகின்ற வாகன நெரிசலை கட்டுப்படுத்த மாற்று நடவடிக்கை எடுக்க கோரியும். 

மக்கள் பயன்படுத்தும் வகையில் வாகன பார்க்கிங் ஏற்படுத்த கோரியும் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனுக்கள் அளிக்கப்பட்டன. 


அப்பொழுது மாவட்ட ஆட்சியர் அவர்கள் மனுக்களை பரிசோதித்த பிறகு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளோடு இந்த மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக் கொண்டதுடன் நமது அணுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்துள்ளனர் இதில் வியாபாரிகள் சங்கத் தலைவர் அஸ்ரப், மற்றும் ராயல் ரஃபிக், சுமங்கலி பாபு, ஃபர்ஸ்ட் ஸ்டெப் வல்சல் ராஜன், கேன் சோ ஹாரீஸ், கண்ணாடி சந்தோஷ், ஃபேமிலி டெக்டைல்ஸ் முகம்மது, ஸ்டுடியோ சித்திக், வி கே ஜலில், சிராஜ், மெட்டல் மாட்டு பாபு, மற்றும் பலர் கலந்து கொண்டனர் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு 

No comments:

Post a Comment

Post Top Ad