நீலகிரி மாவட்டத்தில் தேயிலை சாகுபடிக்கு அடுத்தபடியாக மழை காய்கறிகள் அதிகம் பயிரிடப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக கோத்தகிரி உதகை பேரகணி எமரால்டு நஞ்சநாடு முத்தோரை பாலடா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் உருளைக்கிழங்கு முட்டைகோஸ் டர்னிப் கேரட் பீட்ரூட் பீன்ஸ் மட்டுமின்றி ப்ரோக்கோலி ஐஸ் ப்ரூட் சுகுனி போன்ற சீன வகை காய்கறிகளையும் விலை வித்து லாபம் பார்த்து வருகின்றனர். கோத்தகிரி மற்றும் உதகை பகுதியில் விளைவிக்கப்படும் காய்கறிகள் மேட்டுப்பாளையம் மன்டியில் ஏலமுறையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது இதற்கிடையே நீலகிரியில் பயிரிடப்படும் பீன்ஸ் உருளைக்கிழங்கு பீட்ரூட் போன்றவற்றுக்கு பொதுமக்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது என்பதால் அவர்கள் கூடுதல் விளையும் பொருட்படுத்தாமல் பாரம்பரிய காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர் கோத்தகிரி உதகை உள்ளிட்ட தோட்டங்களில் விளையும் மழை காய்கறிகளின் கொள்முதல் விலை கிலோ 100 ரூபாயை தாண்டி அதிகரித்து உள்ளது.
இதனால் காய்கறிகள் பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து கோத்தகிரி மற்றும் உதகை விவசாயிகள் கூறுகையில் நீலகிரி மாவட்டத்தில் 7000 ஏக்கர் பரப்பளவில் காய்கறி பயிர்கள் விளைவிக்கப்பட்டாலும் அவற்றுக்கு தேவையான உரம் இடுபொருட்கள் மருந்து மற்றும் விதைகள் ஆகியவற்றின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது மேலும் கன மழைக்காலத்தில் சேதமாகும் பயிர்களுக்கு மானியம் மற்றும் பயிர் சேது உதவிகள் கிடைக்காததால் விவசாயிகள் வேறு தொழிலுக்கு மாறும் அவல நிலை உள்ளது எனவே மத்திய மாநில அரசுகள் காய்கறி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment