நீலகிரியில் மாவட்டத்தில் உற்பத்தி ஆகும் நீர் ஒரு பகுதி பவானி ஆற்றில் கலந்து பவானிசாகர் அணைமூலம் குடிநீர் மற்றும் விவசாய தேவையை பூர்த்தி செய்கிறது. மற்றொரு புறம் மாயார் ஆற்றில் செல்லும் நீர் கர்நாடாகா சென்று அங்கும் உற்பத்தியாகும் நீருடன் இணைந்து மீண்டும் தமிழகத்திற்க்கு காவிரி ஆற்று நீராக வந்து மேட்டூர் அணைமூலம் குடிநீர் மற்றும் விவசாய தேவையை பூர்த்தி செய்வதால் நீலகிரியை தென்னகத்தின் தண்ணீர் தொட்டி என அழைக்கின்றனர். தற்போது டெல்டா விவசாயத்திற்க்கு பயண்படும் மேட்டூர் அணை நிறம்பி அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment