ரிவர்சைடு பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா-2024 நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ரிவர்சைடு பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா-2024 ஆனது ஜூலை 13 சனிக்கிழமை அன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பள்ளி தலைமையாசிரியர் அவர்கள் வரவேற்றார். பள்ளியின் தாளாளர் திரு. C.K. கந்தசாமி அவர்கள் தலைமையில் 2024 ஆம் ஆண்டு விளையாட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக திரு. டாக்டர். V. குமார் தமிழ்நாடு மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் இணை-இயக்குனர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி விளையாட்டு விழாவை தொடங்கி வைத்து பள்ளி மாணவ மாணவிகளின் தொடர் ஓட்டப் போட்டி, இதர போட்டிகள், வரவேற்பு பரதநாட்டியம், யோகா, ஜூம்பா நடனம் ஆகியவற்றை கண்டுகளித்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் வெற்றிக் கோப்பைகள் வழங்கினார்.
பெற்றோர் மற்றும் முன்னாள் மாணவ மாணவியர் உட்பட ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு 2024-ஆம் ஆண்டு விளையாட்டு விழாவை கண்டு ரசித்து மகிழ்ந்தனர்
ரிவர்சைடு பள்ளியின் துணை-தலைமை ஆசிரியர் அவர்கள் நன்றி கூறினார். விழாவிற்காக ஏற்பாடுகளை (ANNUAL SPORTS FEST-2024) உடற்கல்வி ஆசிரியர் திரு. கோவிந்தன் சார் அவர்கள் தலைமையில் உடற்கல்வி ஆசிரியர் குழுவினர் செய்திருந்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K. A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment