தரைப்பாலத்தின் மீது செல்லும் வெள்ளம் : புதிய பாலம் பணி எப்போது முடிவடையும்? - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 17 July 2024

தரைப்பாலத்தின் மீது செல்லும் வெள்ளம் : புதிய பாலம் பணி எப்போது முடிவடையும்?



நீலகிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.கூடலூர் சுற்றுவட்டாரத்தில் தொடர்ந்து கனமழை; ஓடைகள், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தரைப்பாலத்தின் மீது தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகனங்கள் அனைத்தும் முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டுள்ளது. 



தரைப் பாலம் மூழ்கியதால் தெப்பக்காட்டில் இருந்து மசினகுடி, மாயார் செல்ல முடியாமல் வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தெப்பக்காடு பகுதியில் அமைந்துள்ள மாயறு பாலம் இடித்துவிட்டு புதிதாக பாலம் கட்டுவதற்காக சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பணி தொடங்கப்பட்டது . ஆனால் இப்பணி மிகவும் மந்த நிலையில் நடைபெற்று வருகிறது. எனவே கூடலூர் மற்றும் மாயாறு மசினகுடி போன்ற பகுதிகளுக்கு சென்று வர மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இந்நிலையில் மாற்றுப் பாதையாக இருந்த தரைப்பாலத்திலும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மரங்கள் மற்றும் கற்கள் போன்றவை அடைப்பு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது . எனவே சுற்றுலாப் பயணிகளும் மற்றும் உள்ளூர் வாசிகளும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள் . இப்பணி மிக துரித கதியில் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. 



 தமிழக குரல் இணையத்தள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர் என். வினோத்குமார்.

No comments:

Post a Comment

Post Top Ad