சாலியாற்றில் அடித்து வந்த 38 உடல்கள்; அடையாளம் காண ஏற்பாடு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 31 July 2024

சாலியாற்றில் அடித்து வந்த 38 உடல்கள்; அடையாளம் காண ஏற்பாடு



வயநாடு சூரல்மலா மற்றும் முண்டகை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கின் போது ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் பலர் அடித்துச் செல்லப்பட்டனர். அடித்துச் செல்லப்பட்ட உடல்கள் கேரள மாநிலம் மலப்புரம் நிலம்பூர் பகுதிக்குச் சென்றது. அங்குள்ள சாலியாறு பகுதியில் சுமார் 38 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீட்கப்பட்ட உடல்கள் அனைத்தும் கேரளா மேப்பாடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. வயநாடு பகுதியில் சிக்கியவர்களை உறவினர்கள் தேடி வரும் நிலையில் 38 உடல்கள் சாலியாறு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் அவர்களை அடையாளம் காண்பதற்காக உறவினர்கள் மேப்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் மேப்பாடி அரசு மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத்

கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad