தமிழகத்திலேயே முதல் முறையாக தாயகம் திரும்பியோர் சேவை மையம் திறப்பு விழா குன்னூரில் நடைபெற்றது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 22 July 2024

தமிழகத்திலேயே முதல் முறையாக தாயகம் திரும்பியோர் சேவை மையம் திறப்பு விழா குன்னூரில் நடைபெற்றது


தமிழகத்திலேயே முதல் முறையாக தாயகம்  திரும்பியோர் சேவை மையம் திறப்பு விழா குன்னூரில்  நடைபெற்றது



நீலகிரி மாவட்டம் குன்னூர் சேலாஸ் பகுதியில் தாயகம்  திரும்பியோர் சேவை மையத்தை ரெப்கோ வங்கி இயக்குநர் வழக்கறிஞர்  கிருஷ்ணகுமார் திறந்து வைத்து இதில் ரெப்கோ வங்கி தாயகம் திரும்பிய தமிழர்களூக்கு வழங்கப்படும்  சலுகைகள்  பற்றி விரிவாக. எடுத்துரைத்தார் குறிப்பாக தாயகம் திரும்பிய மக்கள் வசிக்க கூடிய இடங்களில்  காலணிகளில்   20 இலட்சம் மதிப்புடைய சமுதாய கூடம் மற்றும் இலவச. தையல் மிசின்  கல்வி உதவி தொகை இறந்தவர்களுக்கு ஈமச்சடங்கு தொகை 



20 ஆயிரம்   தொழிலாளர்களுக்கு இழை பறிக்கும் இயந்திரம் போன்ற பல்வேறு நலதிட்ட உதவிகள் வழங்கப்ட்டு  வருவதாக தெரிவித்தனர் இத்தனை சலுகைகள்  நீங்கள்  இலவசமாக பெருவதற்கு ரெப்கொ வங்கியில் 100 ரூபாய் செலுத்தி  உறுப்பினர்கள் ஆனால் போதும்  என தெரிவித்னர் இதில் ரெப்கோ வங்கி அறங்காவலர் மதிவாகனம் சந்திரமோகன் அண்ணாதுரை சன்முகலிங்கம் ஜான் ஹீதரன் ஒலியழகன் மோகன்ராஜ் ராம்கிளி ராஜேந்திரன்  நல்லேந்திரன் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர் நிகழ்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் உலிக்கல்  பேரூராட்சி துனைத்தலைவரும் ரெப்கோ வங்கி உறுப்பினருமான ரமேஷ்குமார் சிறப்பாக செய்திருந்தார் கூட்டத்தில்  கலந்துகொண்ட அனைவருக்கும்  உணவு வழங்கப்பட்டது.                      



 தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad