நீலகிரி மாவட்டத்தில் வசித்துவரும் பொதுமக்கள் மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்படும்போது 24X7 முறையில் இயங்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் செயல்பட்டுவரும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 22 July 2024

நீலகிரி மாவட்டத்தில் வசித்துவரும் பொதுமக்கள் மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்படும்போது 24X7 முறையில் இயங்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் செயல்பட்டுவரும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்


 நீலகிரி மாவட்டத்தில் வசித்துவரும் பொதுமக்கள் மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்படும்போது 24X7 முறையில் இயங்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் செயல்பட்டுவரும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறே வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருகிறது. உதகை கோட்டத்திற்கு 0423- 2445577, குன்னூர் கோட்டத்திற்கு 0423-2206002, கூடலூர் கோட்டத்திற்கு 04262- 261295, உதகை வட்டத்திற்கு 0423-2442433, குன்னூர் வட்டத்திற்கு 0423-2206102, கோத்தகிரி வட்டத்திற்கு 04266-271718, குந்தா வட்டத்திற்கு 0423-2508123, கூடலூர் வட்டத்திற்கு 04262-261252 மற்றும் பந்தலூர் வட்டத்திற்கு 04262-220734 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டும் தகவல் தெரிவிக்கலாம்.


எனவே, மாவட்ட நிர்வாகம் மேற்படி எவ்வித இயற்கை சீற்றத்தை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளுடன் தயார் நிலையில் உள்ளதால் பொதுமக்கள் எவ்வித அச்சமும் அடையவேண்டாம் எனவும் மேற்குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad