ஒரு வாரத்திற்கு கனரக வாகனங்கள் செல்ல தடை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 31 July 2024

ஒரு வாரத்திற்கு கனரக வாகனங்கள் செல்ல தடை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்




நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருவதாலும் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று முதல் மூன்று நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் அதிக அளவு மழை பொழிவு ஏற்படுவதாலும் நீரோடைகளில் நீர் நிரம்பி திடீர் வெல்லப்போருக்கு ஏற்படும் நிலச்சரிவு ஏற்படும் வாய்ப்புள்ளது. மேலும் அதிவேகமாக காற்று வீசுவதன் காரணமாக பல இடங்களில் மரங்கள் மரக்கிளைகள் மற்றும் மின்கம்பங்கள் சாலைகளில் விழுந்து பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகும்.


 இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் ஏற்படாமல் இருக்க சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு வேறு மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களில் நீலகிரி மாவட்டத்தில் பெரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக வரவேண்டும் மேலும் உதகை முதல் கூடலூர் செல்லும் சாலையில் ஆகாச பாலம் என்ற இடத்தில் சாலை பழுது பார்க்கும் பணி நடைபெற்று வருவதாலும் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை மற்றும் கூடுதலும் கனரக சரக்கு வாகனங்கள் அத்தியாவசிய பொருட்கள் எடுத்துச் செல்லும் வாகனங்கள் தவிர இன்று முதல் ஒரு வாரத்திற்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரூ அவர்கள் தெரிவித்துள்ளார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad