கூடலுார், தேவர்சோலை பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை 'டிரோன்' கேமரா மூலம் கண்காணித்து, 'கும்கி' யானைகள் உதவியுடன் விரட்டும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கூடலுார், தேவர்சோலை நெல்லிக்குன்னு மற்றும் சுற்றுவட்டார குடியிருப்பு பகுதிகளில் இரவில் காட்டு யானைகள் நுழைந்து விவசாய பயிர்கள் வாகனங்களை சேதப்படுத்தி, மக்களை அச்சுறுத்தி வருகின்றன.
பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி, அஞ்சுகுன்னு சுற்றுவட்ட கிராம மக்கள், 11ம் தேதி முதல் அஞ்சுகுன்னு பகுதியில் உண்ணாவிரத போராட்டத்திலும்; குச்சிமுச்சி சுற்றுவட்டார பகுதி மக்கள், 21ம் தேதி முதல் குச்சிமுச்சி பகுதியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்தது.வனத்துறையினர், 4 முதுமலை 'கும்கி' யானைகள் உதவியுடன், காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், 'பிரச்னை தொடர்பாக, கலெக்டர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பேசி தீர்வு காணப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர். அதனை ஏற்று, குச்சிமுச்சி மக்கள் 24ம் தேதியும்; அஞ்சுகுன்னு மக்கள் 25ம் தேதி போராட்டத்தை கைவிட்டனர்.
இதனால் டிரோன்' கேமரா மூலம், காட்டு யானைகள் கண்காணித்து, கும்கி யானைகள் உதவியுடன் அவைகளை விரட்டும் பணியில், 40 வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்
வனத்துறையினர் கூறுகையில், 'இப்பகுதியில் நிலப்பரப்பு அமைப்பில், காட்டு யானைகள் விரட்டுவதில் சிரமம் உள்ளது.
இதனை, கருத்தில் கொண்டு 'டிரோன்' கேமரா மூலம் காட்டு யானைகளை கண்காணித்து, 'கும்கி' யானைகள் உதவியுடன், 40-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் அவைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்,' என்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத்
கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment