நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஒரு சிறிய டவுன் பகுதியாகும். மக்கள் தங்கள் பண தேவைக்காக வங்கியை நாடுகின்றனர். தேயிலை தொழிற்சாலைகளுக்கு விவசாயிகள் அளித்த பசுந்தேயிலைக்கான தொகை வங்கிகணக்கில் செலுத்தப்படுகிறது. காய்கறிகள் மண்டிகளிலும் வங்கிகணக்குகளுக்கே பணத்தை அனுப்புகின்றனர் கூலித் தொழிலாளர்களுக்கும் வங்கிக்கணக்கிற்க்கு பணம் அனுப்பப்படுகிறது சிறிய அளவிளான பட்டன் போன் வைத்திருக்கும் விவசாயிகள் மற்றும் கூலித்தொழிலாளிகள் பணத்தை எடுக்க ஏ டி எம் களை முற்றுகையிடுகின்றனர். சில தேயிலை தொழிற்சாலைகள் சனிக்கிழமை வங்கிகணக்கில் பணத்தை செலுத்திவிடுகின்றன அதனால் சனிக்கிழமைகளில் வங்கி ஏடிஎம் களில் குவியும் மக்களால் தொகை பல வங்கி ஏடிஎம் களில் தீர்ந்து விடுகிறது. அதனால் பணம் இருக்கும் ஏடிஎம் களில் மக்கள் கூட்டம் கூடுகிறது. ரூபாய் 500 தாள்கள் மட்டுமே வருவதால் விவசாயிகளின் சில்லறை பணம் அடுத்த வாரம் தேயிலை பணம் வரும் வரை எடுக்க முடியாத நிலைக்கு செல்கிறது. மேலும் ஞாயிறு வங்கிகளுக்கு விடுமுறை ஆவதால் ஏடிஎம் களில் பணம் தீர்ந்து திங்கட்கிழமை வங்கிகள் திறந்து மிஷினில் பணம் நிறப்ப மதியம் ஆவதால் சனிக்கிழமைகளில் ஏடிஎம் களில் மக்கள் கூட்டம் கூடுகிறது. கூட்டுறவு வங்கி ஏடிஎம் களிலும் இதே நிலை தொடர்கிறது. வங்கியாளர்கள் தகுந்த ஏற்பாடு செய்யவேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment