மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் இத்தலார் மற்றும் முள்ளிகூர் ஊராட்சியில் 650 க்கும் மேற்பட்ட பயனாளிகள் விண்ணப்பம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 23 July 2024

மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் இத்தலார் மற்றும் முள்ளிகூர் ஊராட்சியில் 650 க்கும் மேற்பட்ட பயனாளிகள் விண்ணப்பம்




. தமிழகத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர் அதில் இன்றைய தினம் நீலகிரி மாவட்டம்  உதகைக்கு அருகில் உள்ள இத்தலார் மட்டும் முள்ளிகூர் ஊராட்சிக்கு உட்பட்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 650 க்கும் மேற்பட்ட பயனாளிகள் தங்களின் முதியோர் உதவி தொகை விதவை பென்ஷன் தொகை தங்களது வீடுகளுக்கு மதில் சுவர் போன்ற விண்ணப்பங்களை அளித்துள்ளனர்.


 இதில் 650 க்கும் மேற்பட்ட பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இத்தலார் பஞ்சாயத்தின் தலைவர் திரு பந்தையன் அவர்கள் தெரிவித்துள்ளார் அவர்கள் அனைவருக்கும் ஏறக்குறைய 30 நாட்களுக்குள் அவர்களுக்கு உண்டான தீர்வுகளை அளிக்கப்படும் அவர்களுக்கு உண்டான மனுவின் இறுதி நிலை அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தார் இதுபோன்று பல்வேறு பகுதிகளிலும் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலமாக பல லட்சம் பயனாளிகள் பயன்பெற்றுள்ளதால் நமது தமிழக முதல்வர் திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பொதுமக்கள் அனைவரும் நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.



இது போன்ற திட்டங்களால் பொதுமக்கள்  அவர்களின் வேலைப்பாடுகளும் குறைவாக உள்ளது இதுபோன்ற திட்டங்கள் இன்னும் பல தோன்ற வேண்டும் இதனால் மக்களுக்கு மிகவும் எளிதான முறையில் ஒரே இடத்தில் 650 விண்ணப்பங்களுக்கு மேல் பெற்றுள்ளனர் இதற்கு ஏற்பாடு செய்த நீலகிரி மாவட்டத்திற்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் முதியோர் மற்றும் இத்தலார் ஊராட்சி நிர்வாகத்திற்கும் பொது மக்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்... 


தமிழர் குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு....

No comments:

Post a Comment

Post Top Ad